Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

துப்புரவுப் பணியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு ஆண்டு விடுப்பு 10 நாளுக்கு உயர்வு

வாசிப்புநேரம் -
துப்புரவுப் பணியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு ஆண்டு விடுப்பு 10 நாளுக்கு உயர்வு

(கோப்புப் படம்: AFP/ROSLAN RAHMAN)

வெளியீடு : 19 Jul 2026 12:57PM புதுப்பிப்பு : 20 Jul 2026 03:27PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.


வெளி ஒப்பந்தங்களின் கீழ் (Outsourced) எடுக்கப்படும் ஊழியர்களின் ஆண்டு விடுப்பு ஏழு நாளில் இருந்து பத்து நாளுக்கு உயர்த்தப்படும் என்று மனிதவள அமைச்சு அறிவித்திருக்கிறது. படிப்படியாகச் சம்பள உயர்வு பெறும் அத்தகைய ஊழியர்களுக்கு இது பொருந்தும்.

அந்த நடைமுறை வரும் 2029ஆம் ஆண்டு முதல் நடப்புக்கு வரும் என்று அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

புதிய விடுப்பு முறை படிப்படியாக அறிமுகமாகும் என்றது அறிக்கை.

முதலில் துப்புரவு, பாதுகாப்பு, தோட்டக்கலை, மின்தூக்கி-மின்படிக்கட்டு, கழிவு நிர்வாகம் ஆகியவற்றில் வேலை பார்ப்போருக்கு கூடுதல் வருடாந்தர விடுப்பு கொடுக்கப்படும்.

இந்தத் துறைகளில் பணிபுரியும் வெளி ஒப்பந்தத்தில் எடுக்கப்படும் சுமார் 60 விழுக்காட்டு ஊழியர்கள் பயன் அடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தியாவசியப் பணியில் இருக்கும் இத்தகைய ஊழியர்களைத் தொடர்ந்து வேலையில் வைத்துக் கொள்வது அவசியம்; அவர்களது சேவை தடங்கல் இல்லாமல் தொடரவேண்டும்; அதை உறுதி செய்ய விடுப்பை அதிகரிக்கும் இந்த முயற்சி உதவும் என்று அமைச்சு சொன்னது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்