Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Cathay Cineplexesஇன் முன்னாள் நிர்வாகம் $74.6 மில்லியன் கட்டவேண்டும்: UOB வங்கி

வாசிப்புநேரம் -
இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் மூடப்பட்ட Cathay Cineplexes திரையரங்கங்களின் முன்னாள் நிர்வாக நிறுவனம் mm2 Asia எஞ்சிய கடனை அடைக்கவேண்டும் என்று UOB வங்கி வலியுறுத்தியுள்ளது.

mm2 Asia கட்டவேண்டிய எஞ்சிய தொகை 74.6 மில்லியன் வெள்ளி.

கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) நிறுவனத்திற்கும், அதன் துணை நிறுவனங்கள் mm2 Entertainment, UnUsUal Management, mm Plus, mm Connect ஆகியவற்றுக்கும் கடனை அடைக்குமாறு UOB வங்கி கடிதம் அனுப்பியதாக mm2 Asia தெரிவித்தது.

இன்னும் 7 நாள்களுக்குள் கடனை அடைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று UOB எச்சரித்திருக்கிறது.

mm2 Asiaவுக்குக் கடன் வழங்கிய மற்ற நிறுவனங்களும் கடனை அடைக்கும்படி கோரியுள்ளன.

Standard Chartered வங்கி 905,000 வெள்ளியையும் Frasers Centrepoint Trust நிறுவனம் 2.6 மில்லியன் வெள்ளியையும் திருப்பிச் செலுத்துமாறு கேட்டிருக்கின்றன.

2025ஆம் நிதி ஆண்டில் 122.4 மில்லியன் வெள்ளியை இழந்ததாக mm2 Asia அறிவித்தது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்