Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ரெட் சுவஸ்திகா பள்ளியில் ஊழியர் ஒருவரைக் காரால் தள்ளும் ஓட்டுநர் - விசாரிக்கும் கல்வியமைச்சு

ரெட் சுவஸ்திகா பள்ளியில் ஊழியர் ஒருவரைக் காரால் தள்ளும் ஓட்டுநர் - விசாரிக்கும் கல்வியமைச்சு

வாசிப்புநேரம் -

ரெட் சுவஸ்திகா பள்ளியில் ஊழியர் ஒருவரைக் காரைக் கொண்டு தள்ளிய சம்பவம் குறித்துக் கல்வியமைச்சு விசாரணை நடத்துகிறது.

சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் பரவிவருகிறது.

ரெட் சுவஸ்திகா பள்ளி பிடோக்கில் உள்ளது.

காணொளியில் பள்ளியின் நுழைவாயிலில் ஒரு வெள்ளைக் காரை ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்துகிறார்.

அதன்பிறகு கார் ஓட்டுநர் தமது காரைக்கொண்டு அந்த ஊழியரைத் தள்ளுகிறார்.

காணொளியைத் தாம் பார்த்ததாகவும் அதில் கார் ஓட்டுநர் பள்ளியின் பாதுகாப்பு அதிகாரிக்கும் ஊழியருக்கும் ஆபத்து விளைவிக்கும் நோக்கத்தில் நடந்துகொண்டதாகவும் கல்வியமைச்சர் சான் சுன் சிங் Facebook பக்கத்தில் பதிவிட்டார்.

இது ஏற்றுக்கொள்ளப்படாத நடத்தை என்று அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் குறித்து விசாரிக்கப்படுகிறது என்றும் தேவைப்பட்டால் காவல்துறையில் புகார் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் சான் கூறினார்.

- CNA/ic(gs) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்