Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பள்ளிகளுக்கு வெளியே துணைப்பாட நிலைய விளம்பரங்களைத் தடுக்கக் கல்வி அமைச்சு முயலும் : துணை அமைச்சர் கான்

வாசிப்புநேரம் -
துணைப்பாட நிலையங்கள் விரும்பத்தகாத வழிகளில் விளம்பரம் செய்வதைத் தடுப்பது பற்றிக் கல்வி அமைச்சு பரிசீலிப்பதாகக் கல்விக்கான துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் (Gan Siow Huang) கூறியுள்ளார்.

பிள்ளைகள் பள்ளியில் தேர்ச்சி பெறுவது குறித்த பெற்றோரின் பயத்தைக் குறிப்பிட்டுச் சில துணைப்பாட நிலையங்கள் விளம்பரம் செய்வதை அமைச்சு கவனித்துள்ளதாய் அவர் தெரிவித்தார்.

புக்கிட் பஞ்சாங்கில் தொடக்கப்பள்ளி ஒன்றின் வெளியே பெற்றோரிடம் துணைப்பாட நிலைய ஊழியர்கள் விளம்பரப் பிரசுரங்கள் விநியோகித்ததாகத் தெரிகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திரு லியாங் எங் ஹுவா (Liang Eng Hwa) அது குறித்து மன்றத்தில் அக்கறை தெரிவித்தார்.

பள்ளிகளுக்கு வெளியே துணைப்பாட நிலையங்கள் விளம்பரம் செய்வதைத் தடுக்கக் கல்வி அமைச்சு வழி்காட்டி விதிகளை வகுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்த திருவாட்டி கான் அவ்வாறு விளம்பரம் செய்யப்படுவதைக் கல்வி அமைச்சும் பள்ளிகளும் ஆதரிப்பதில்லை என்று கூறினார்.

துணைப்பாட நிலையங்களின் அத்தகைய விளம்பர நடவடிக்கைகளைத் தவிர்க்கும் வழிமுறைகள் ஆராயப்படுவதாக அவர் சொன்னார்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்