துன்புறுத்தல் சம்பவங்கள் கண்டிக்கப்படும், உணர்ச்சிவசப்படுவது நிலைமையைச் சிக்கலாக்கும்: கல்வி அமைச்சர்
வாசிப்புநேரம் -

(படங்கள்: CNA)
சிங்கப்பூர் பள்ளிகளில் நிகழும் துன்புறுத்தல் சம்பவங்களுக்கு எதிராகக் கல்வி அமைச்சு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
அட்மிரல்ட்டி உயர்நிலைப் பள்ளியில் நடந்த இரு சம்பவங்களின் காணொளிகள் Facebookஇல் பகிரப்பட்டிருந்தன.
அதன் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
பரவலாகப் பகிரப்படும் சமூக ஊடகப் பதிவுகள் உணர்வுகளைத் தூண்டக்கூடியவை; சமூக ஊடகத்திலேயே அவர்களைக் கண்டிக்கும் போக்கு அதிகரிக்கலாம் என்று அமைச்சர் சான் கூறினார்.
இதனால் மோசமான செயல்கள் இயல்பாகலாம்; திருத்தும் நடவடிக்கைகள் தடுக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
தேவையில்லாமல் பெரியவர்கள் தலையிடும்போது நிலைமை சிக்கலாகலாம். அதனால் மாணவர்களுக்கு வழிகாட்டுவது சவாலாகிவிடும் என்றார் அமைச்சர்.
அத்தகைய சம்பவங்களைக் கண்டு மக்கள் பலர் உணர்ச்சிவசப்படுகின்றனர்.
சிலர் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்கின்றனர் அல்லது பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களை மிரட்டுகின்றனர். அதைக் கல்வி அமைச்சு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்று அமைச்சர் சொன்னார்.
இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் அவற்றைச் சமாளிக்க அதிக நேரமும் வளங்களும் தேவை. அதனால் அவற்றை வளரவிடக்கூடாது என்றும் அவர் சொன்னார்.

ஆதாரம் : CNA