Skip to main content
பயிற்சி வேலை அனுமதி தவறாகப் பயன்படுத்தப்படுகின்றதா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பயிற்சி வேலை அனுமதி தவறாகப் பயன்படுத்தப்படுகின்றதா? - மனிதவள அமைச்சு விசாரணை

வாசிப்புநேரம் -
பயிற்சி வேலை அனுமதியை நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனவா என்பதை விசாரித்து வருவதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

பயிற்சி வேலை அனுமதியைக் கொண்டு வெளிநாட்டவர்கள் சிங்கப்பூரில் வேலை சார்ந்த பயிற்சிக்குச் செல்லலாம்.

வெளிநாட்டு மாணவர்கள் அல்லது வெளிநாட்டுக் கிளைகளில் வேலை செய்யும் ஊழியர்களைச் சிங்கப்பூரில் வேலைக்கு எடுக்க விரும்பும் நிறுவனங்கள் பயிற்சி வேலை அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.

அத்தகைய சில விண்ணப்பங்களுக்குக் கூடுதல் ஆதாரங்கள் கேட்கப்படுவதாக அமைச்சு கூறியது.

வெளிநாட்டு மாணவர்களை வேலைக்கு எடுக்க:

- அந்த வேலை அவர்களின் படிப்பின் ஓர் அங்கமாக இருக்க வேண்டும்

- அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய கழகத்தில் பயில வேண்டும்

- அல்லது அவர்கள் மாதம் குறைந்தது 3,000 வெள்ளி சம்பளம் பெற வேண்டும்

என்று அமைச்சு சொன்னது.

நிறுவனத்தின் வெளிநாட்டுக் கிளையில் வேலை செய்பவரைச் சிங்கப்பூரில் பணியமர்த்த:

- அவர்கள் மாதம் குறைந்தது 3,000 வெள்ளி சம்பளம் பெற வேண்டும்.

சென்ற ஆண்டு (2024) டிசம்பர் மாதத்திலிருந்து இந்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் வரை பயிற்சி வேலை அனுமதியின் கீழ் வேலை செய்யும் 13 ஊழியர்களைச் சந்தித்ததாக Transient Workers Count Too அமைப்பு கூறியிருந்தது.

அவர்களில் பலருக்கும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததைவிட குறைவான சம்பளம் வழங்கப்பட்டதாக அது தெரிவித்தது.

அவர்களின் வேலை நேரமும் அளவுக்கு அதிகமாக இருந்ததாக அமைப்பு சொன்னது.

பயிற்சி வேலை அனுமதிகளைத் தவறாகப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்