Skip to main content
பணிப்பெண்களின் வேலையிடத்தில் சோதனை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பணிப்பெண்களின் வேலையிடத்தில் சோதனை - 'மனிதவள அமைச்சின் புதிய நடைமுறை அதிகநாள் நீடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்'

 பணிப்பெண்களின் வேலையிடத்தில் சோதனை - 'மனிதவள அமைச்சின் புதிய நடைமுறை அதிகநாள் நீடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்' 

வாசிப்புநேரம் -
பணிப்பெண்களின் வேலையிடத்தில் சோதனை - 'மனிதவள அமைச்சின் புதிய நடைமுறை அதிகநாள் நீடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்'

(படம்: Ang Hwee Min)

பணிப்பெண்கள் வேலை செய்யும் இல்லங்களில், மனிதவள அமைச்சு நடத்தவிருக்கும் புதிய சோதனை நீண்ட நாள் நீடித்தால் அதிகப் பலன் கிடைக்கும் என்று பணிப்பெண்கள் கூறுகின்றனர்.

இம்மாதம் 5 ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டுப் பணிப்பெண்கள் வேலை செய்யும் வீட்டிற்குச் சென்று அவர்களின் வேலை, வாழ்க்கைச் சூழலை மனிதவள அமைச்சு அதிகாரிகள் சோதித்து வருகின்றனர்.

மாதந்தோறும் 200 வீடுகள் தெரிவு செய்யப்படும்.

புதிய நடவடிக்கைப் பற்றி "செய்தி" சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கருத்துக் கேட்டது.

மனிதவள அமைச்சின் புதிய நடைமுறை பாராட்டுக்குரியது.

பணிப்பெண்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை உறுதி செய்ய அது கூடுதலாக உதவும். முதலாளிகளும் பணிப்பெண்களின் தேவைகளை மேலும் அதிகமாகப் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கும்.

- Nostra Manpower Pte Ltd

என்றாலும், புதிய சோதனை நடைமுறையால், முதலாளிகளுக்கும் பணிப்பெண்களுக்கும் இடையே சிறுசிறு சலசலப்பும் ஏற்படலாம். எனவே, அதிகாரிகள் கவனமாகச் செயல்பட வேண்டும் என்றார் Nostra Manpower நிர்வாகி.

Related article image
(கோப்புப் படம்: TODAY/Illi Nadhirah Mansor)

அதிகாரிகள் எப்போது நம் வீட்டிற்கு வருவார்கள், எவ்வளவு நேரம் பேசுவார்கள் போன்ற தகவல்கள் தெளிவாகத் தெரிந்தால் நன்றாக இருக்கும் ஏனென்றால் அது நம் சொந்த வேலைகளைப் பாதிக்காமல் இருக்கும் 

Related article image

சில வீடுகளில் பணிப்பெண்ணும் முதலாளியும் நல்ல புரிந்துணர்வோடு இருப்பார்கள் ஆனால், திடீர் சோதனைகளால் முதலாளிகளுக்குக் கூடுதல் பதற்றம் ஏற்படலாம், பணிப்பெண் ஏதாவது தவறாகச் சொல்லிவிடுவாரோ என்று கூடப் பயப்படலாம், அது முதலாளிகளைப் பாதிக்கலாம்.

- திருவாட்டி தேவிகா (4 ஆண்டுகளாகப் பணிப்பெண் வைத்துள்ளார்)

சிங்கப்பூரில் 200,000க்கும் அதிகமானோர் இல்லப் பணிப்பெண்களாக உள்ளனர். மாதந்தோறும் சுமார் 200 என்றால், ஆண்டுக்கு 2,400 இல்லங்களில் அதிகாரிகள் நேரடியாகப் பேசமுடியும்

அது சற்றே குறைவான எண்ணிக்கை. COVID-19 சூழலும் உள்ளது.

Related article image
(படம்:  CNA)

சோதனையின் போது முதலாளியின் அக்கறைகளையும் கேட்கமுடியும்.
முதலாளிக்கும் பணிப்பெண்ணுக்கும் இடையில் உள்ள பந்தத்தை இணைக்கும் விதத்தில் அதிகாரிகள் பேசினால் கூடுதல் சிறப்பு என்றார் திருவாட்டி ஜெய பிரேமா.

மனிதவள அமைச்சின் புதிய நடைமுறை பற்றிப் பணிப்பெண்கள் சிலர் அறிந்துள்ளனர்.

முதலாளியுடன் தமக்குப் பிரச்சினைகள் ஏதும் இல்லை. என்றாலும், பிரச்சினை இருப்போருக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும்

- அந்தோனியம்மாள் (சிங்கப்பூரில் 4 ஆண்டுகளாக பணிப்பெண்ணாய் இருக்கிறார்.)

Related article image
(படம்: Ang Hwee Min) 

சிங்கப்பூரில் முதன்முறை பணிப்பெண் வேலைக்கு வரும் அனைவருக்கும், ஆண்டு இறுதிக்குள் நேரடி நேர்காணல் முறையை விரிவுபடுத்த மனிதவள அமைச்சு திட்டமிடுகிறது.  

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்