Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சட்டவிரோத வேலை?

வாசிப்புநேரம் -
சாங்கி விமான நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சட்டவிரோத வேலை?

படம்: Facebook / Changi Airport

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 02 Nov 2026 04:39PM புதுப்பிப்பு : 02 Nov 2026 05:01PM

சாங்கி விமான நிலையத்தில் வேலை அனுமதி விதிமீறல் தொடர்பில் 45 நிறுவனங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

சுமார் 270 வெளிநாட்டு ஊழியர்கள் சட்டவிரோதமாக வேலையில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று மனிதவள அமைச்சு சொன்னது.

அவர்கள் சரக்குகளைக் கையாளும் SATS நிறுவனத்தின் குத்தகையாளர்கள், துணைக் குத்தகையாளர்களின் ஊழியர்கள் என்று அமைச்சு கூறியது.

அது அண்மையில் விமான நிலையத்தில் ஊழியர்களிடம் சோதனை நடத்தியது.

மேல்நிலை வேலை அனுமதி (Employment Pass)  பெற்ற ஊழியர் ஒருவர் சரக்குகளைக் கையாண்டதை அமைச்சின் அதிகாரி கவனித்தார்.

வேலை அனுமதி விண்ணப்பத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யாமல் வேறு வேலையைச் செய்த இன்னும் சிலரும் அடையாளம் காணப்பட்டனர்.

ஊழியர்களுக்கு வேலை அனுமதியைப் பெற்றுத்தர நிறுவனங்கள் சம்பளம், வேலை தொடர்பில் பொய்த்தகவல் கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

குத்தகையாளர்களின் நிர்வாகமுறையை வலுப்படுத்துமாறு SATS நிறுவனத்திடம் கூறியுள்ளதாக அமைச்சு சொன்னது.

நிறுவனங்கள் மீதான விசாரணை தொடர்கிறது.

வேலை அனுமதி விண்ணப்பத்தில் பொய்த்தகவல் கொடுப்போருக்கு 20,000 வெள்ளி வரை அபராதமோ ஈராண்டு வரை சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்