Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வீட்டிலிருந்து வேலைசெய்யும் நடைமுறைக்கான சட்டத்தை அவசரமாகக் கொண்டுவருவது பொருளியல் மீட்சியைப் பாதிக்கும்: மனிதவள அமைச்சு

வீட்டிலிருந்து வேலைசெய்யும் நடைமுறைக்கான சட்டத்தைக் கொண்டுவருவதில் மனிதவள அமைச்சு அவசரம் காட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
வீட்டிலிருந்து வேலைசெய்யும் நடைமுறைக்கான சட்டத்தை அவசரமாகக் கொண்டுவருவது பொருளியல் மீட்சியைப் பாதிக்கும்: மனிதவள அமைச்சு

படம்: AFP

வீட்டிலிருந்து வேலைசெய்யும் நடைமுறைக்கான சட்டத்தைக் கொண்டுவருவதில் மனிதவள அமைச்சு அவசரம் காட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை வேகமாக அறிமுகப்படுத்தினால் அது பொருளியல் மீட்சியைப் பாதிக்கும் என்று மனிதவளத் துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் (Gan Siow Huang) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான மனிதவள அமைச்சின் கொள்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன.

அதற்குத் திரு கான் பதிலளித்தார்.

2020 ஆம் ஆண்டின் தரவுகள்படி நான்கில் மூன்று ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்யும் வசதிகளைக் கொண்டுள்ளனர்.

தொழில்களுக்கு ஏற்றவாறு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்யும் நேரங்கள் மாறுபடுகின்றன என்றார் திரு கான்.

தற்போதைய நிலவரப்படி 50 விழுக்காட்டு ஊழியர்கள் வரை வேலையிடங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பெரும்பாலான ஊழியர்கள் இவ்வாண்டு முதல் காலாண்டு வரை வீட்டிலிருந்து வேலைசெய்ய விரும்புகின்றனர் என்றார் திரு கான்.

நீக்குப்போக்கான வேலை நடைமுறைகளை வழங்க நிறுவனங்கள், சங்கங்கள் ஆகியவற்றுடன் முத்தரப்புப் பங்காளிகள் ஆலோசனை நடத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

-CNA/hm(cy) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்