Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிறிய நிறுவனங்கள் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்துவதில் உதவக் கூடுதல் முயற்சிகள்: மனிதவள அமைச்சு

வாசிப்புநேரம் -
சிறிய நிறுவனங்கள் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்துவதில் உதவக் கூடுதல் முயற்சிகள்: மனிதவள அமைச்சு

(படம்: AFP/Roslan RAHMAN)

வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் விதிமீறல்களுக்கான தற்போதைய குற்றப்புள்ளி முறையை சிங்கப்பூர் மறுஆய்வு செய்கிறது. 

அண்மையில் வேலையிட மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த ஆண்டு மொத்தம் 27 பேர் வேலையிட விபத்துகளில் உயிரிழந்தனர். 

2019ஆம் ஆண்டின் அதே காலக்கட்டத்தோடு ஒப்பிடுகையில் அது கிட்டத்தட்ட இருமடங்கு.  

மறுஆய்வின்கீழ் பாதுகாப்பு விதிகளை மீறும் நிறுவனங்கள் அரசாங்கக் குத்தகைகளைப் பெறவோ வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தவோ இயலாது. 

வருடாந்திரப் பாதுகாப்பு, சுகாதார இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) அந்த விவரங்களை வெளியிட்டார்.

வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கையையும் மனிதவள அமைச்சு மறுபரிசீலனை செய்யும் என்று கூறப்பட்டது. 

தவறுகள் நேர்வதைத் தவிர்க்கவும் கூடுதலான குத்தகையாளர்கள் பயிற்சிபெற்ற திறனாளர்களைப் பணியில் அமர்த்திப் பயன்பெறவும் அது வழியமைக்கும். 

ஆபத்து அதிகமிருக்கும் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

சிறிய நிறுவனங்கள் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்துவதற்கு உதவவும் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் கலாசாரத்தை உருவாக்கவும் கூடுதல் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்று அமைச்சர் டான் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa