Skip to main content
கள்ளப் பணமாற்றத்தில் சிக்கிய சிங்கப்பூர் ஆடவருக்குச் சிறை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கள்ளப் பணமாற்றத்தில் சிக்கிய சிங்கப்பூர் ஆடவருக்குச் சிறை

வாசிப்புநேரம் -
கள்ளப் பணமாற்றத்தில் சிக்கிய சிங்கப்பூர் ஆடவருக்குச் சிறை
படம்: AFP
வெளியீடு : 24 Feb 2026 06:44PM புதுப்பிப்பு : 24 Feb 2026 06:45PM
கள்ளப் பணமாற்றத்துக்கு உதவிய சிங்கப்பூர் ஆடவருக்கு இரண்டரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

33 வயது லிம் கிம் சுவானுக்கு (Lim Kim Chuan) 23,000 வெள்ளி அபராதம் செலுத்தும்படியும் உத்தரவிடப்பட்டது.

2024இல் லிம் கடன் தொல்லையில் சிக்கியிருந்தார். கடன் முதலைகளிடம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கச் சிரமப்பட்டார்.

ஏலன் (Alan) என்ற கடன் முதலைக்கு லிம் வட்டியுடன் 5,000 வெள்ளி திருப்பித் தரவேண்டியிருந்தது.

ஏலனிடம் வேலை செய்ததாக நம்பப்படும் இருவர் லிம்மைச் சந்தித்தனர். அவர்களிடம் தமது வங்கிக் கணக்கைப் பயன்படுத்திக்கொள்ள லிம் அனுமதி தந்தார்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் வரை லிம் மொத்தம் 113,804 வெள்ளியைப் பெற்றுக்கொண்டார்.

பின் அதை அடையாளம் தெரியாத நபரிடம் ஒப்படைத்தார்.

அதற்காக அவருக்கு 3,000 வெள்ளி கொடுக்கப்பட்டது.

லிம் ஒப்படைத்த தொகையில் மோசடியில் பணம் இழந்த 88 வயது முதியவரின் சுமார் 73,000 வெள்ளியும் அடங்கியிருந்ததாய்க் காவல்துறை சொன்னது.

முதியவரின் புகாரை விசாரித்த காவல்துறை லிம்மின் வங்கிக் கணக்கை வைத்து அவரை அடையாளம் கண்டு கைது செய்தது.

பிணையில் விடுதலையான லிம் சென்ற ஆண்டு மீண்டும் கள்ளப் பணமாற்றம் செய்ய உதவியதாகக் கூறப்பட்டது.

ஜனவரியிலிருந்து மே வரை சுமார் 331,000 வெள்ளியை அவர் பெற்றுத் தர உதவியதாகத் தெரிவிக்கப்பட்டது.

லிம் அவர் மீதான இரு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்