Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

'சிங்கப்பூருக்குக் குரங்கம்மை பரவலாம்' - தொற்றுநோய் நிபுணர்

வாசிப்புநேரம் -

ஐரோப்பாவில் பல நாடுகளில் குரங்கம்மைச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆனால் COVID-19 கிருமித்தொற்றைப் போல் அது உலகமெங்கும் பரவக்கூடிய வாய்ப்பு இல்லை எனக் கருதப்படுகிறது.

எனினும் அதன் பரவல் அக்கறைக்குரிய ஒன்று என்கிறார் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் இந்துமதி.

மேலும் குரங்கம்மை சிங்கப்பூருக்குப் பரவும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குரங்கம்மையிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கக்கூடிய பெரியம்மை தடுப்பூசி அனைவரும் போடவேண்டிய அவசியம் ஏற்படுமா?

குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்

என்றார் டாக்டர் இந்துமதி.

ஐரோப்பாவில் திடீரென குரங்கம்மை பரவல்... காரணம்?

அது கொஞ்சக் காலமாகவே பரவிக்கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் இப்போதுதான் கண்டறியப்பட்டிருக்கலாம்

என்று டாக்டர் இந்துமதி கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்?

கூட்டமான இடங்களைத் தவிர்க்குமாறும் கைகளைச் சுத்தம் செய்யுமாறும் டாக்டர் இந்துமதி குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்