சிங்கப்பூரில் இன்னொரு நோயாளியுடன் தொடர்புள்ள முதல் குரங்கம்மைத் தொற்றுச் சம்பவம்; இன்று மொத்தம் இருவர் பாதிப்பு

(படம்: CNA/Marcus Mark Ramos)
சிங்கப்பூரில் மேலும் இருவருக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவருக்கு வயது 54 இவ்வாரத் தொடக்கத்தில் குரங்கம்மைத்தொற்று உறுதியான 33 வயது ஆடவருடன் தொடர்பில் இருந்ததால் அவருக்கும் நோய் தொற்றியதாக அமைச்சு தெரிவித்தது.
உள்ளூர் அளவில் இன்னொரு நோயாளியிடமிருந்து குரங்கம்மைத் தொற்று ஏற்படுவது இதுவே முதல் முறையாகும். அந்த 54 வயது ஆடவர் அண்மையில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவில்லை என்றது அமைச்சு.
இன்று குரங்கம்மைத் தொற்று உறுதிசெய்யப்பட்ட இன்னொருவருக்கு வயது 25. அவரும் அண்மையில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவில்லை. அவருக்கு உள்ளூர் அளவில் குரங்கம்மைத் தொற்று ஏற்பட்டிருப்பதாக அமைச்சு வகைப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் இதுவரை 15 பேருக்குக் குரங்கம்மைத் தொற்று ஏற்பட்டுள்ளது.