மாற்றப்பட்ட 100 தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல்
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் சென்ற நவம்பரிலிருந்து சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பிடிபட்டிருக்கின்றன.
SMD எனும் கையில் எடுத்துச்செல்லும் வேக அளவுக் கருவி அதைச் சாத்தியமாக்கியது.
நிலப் போக்குவரத்து ஆணையம் நவீனக் கருவிகளைக் களத்தில் இறக்கியுள்ளது.
CNA பார்வையிட்ட சோதனை நடவடிக்கையில் ஒரே நாளில் 19 சட்டவிரோதச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சுமார் 36 குற்றங்களும் கண்டறியப்பட்டன.
ஒரு சாதனத்தின் உச்ச வேகத்தைச் சோதிப்பதன் மூலம் சட்டவிரோத அம்சங்களை SMD கருவிகளால் அடையாளம் காண முடியும்.
சாதனம் ஓடாமல் நிற்கும்போதும் அது சாத்தியம்.
முன்பு வேகவரம்பை மீறிச்செல்லும் சாதனங்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கமுடியும்.
இத்தகைய கருவிகளில் இல்லாவிட்டால், விதிகளுக்குட்படாத 20 விழுக்காட்டுக் கருவிகளைக் கண்டறிய முடியாமல் போயிருக்கும் என்று ஆணையம் மதிப்பிடுகிறது.