1000க்கும் அதிகமான சிங்கப்பூரர்களின் பெயர்கள் மீண்டும் வாக்காளர் பதிவேட்டில்...
வாசிப்புநேரம் -

படம்: Google Maps
வாக்காளர் பதிவேட்டில் 1000க்கும் அதிகமான சிங்கப்பூரர்களின் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.
அண்மையில் நடந்துமுடிந்த அதிபர் தேர்தலில் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுப் போயிருந்தது.
இதற்குமுந்திய பொதுத்தேர்தலில் அவர்கள் வாக்களித்தபோதிலும் அவ்வாறு நேர்ந்தது.
அந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வுகாணலாமெனப் பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் கேட்ட கேள்விக்கு அரசாங்கச் சேவைக்குப் பொறுப்புவகிக்கும் அமைச்சரான திரு. சான் சுன் சிங் (Chan Chun Sing) பதிலளித்தார்.
அதிபர் தேர்தலின்போது சுமார் 1,100 பேர் தங்களுக்கு வாக்கு அட்டை கிடைக்கவில்லை எனத் தேர்தல் துறையிடம் புகார் செய்திருந்தனர்.
2020 பொதுத்தேர்தலில் அறிமுகமான மின்னியல் பதிவு முறையில் அவர்களது அடையாள அட்டை சரியாகப் பதிவாகாமல் போனதே பெரும்பாலும் அதற்குக் காரணமாக இருந்திருக்கும் என்று திரு. சான் குறிப்பிட்டார்.
வாக்களிக்கத் தவறியோர் பட்டியலில் வைக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்கு வரும் தேர்தல்களில் தனித்தனியே தகவல் தெரிவிக்கப்படும்.
அப்போது அவர்கள் தங்களது வாக்களிப்புத் தகுதியைச் சரிபார்த்து வாக்காளர் பதிவேட்டில் மீண்டும் பெயர்களைச் சேர்க்கலாம் என முன்பு கூறியதைத் திரு. சான் மீண்டும் இன்று வலியுறுத்தினார்.

ஆதாரம் : CNA