கையுறைப் பெட்டிகளில் 400 கிலோ கஞ்சா
வாசிப்புநேரம் -
படம்: Central Narcotics Bureau
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் வழி பயணம் மேற்கொண்ட சரக்குக் கப்பலில் சுமார் 400 கிலோகிராம் கஞ்சா பிடிபட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (24 செப்டம்பர்) பாசிர் பாஞ்சாங் சோதனை நிலையத்தில் கொள்கலன் சோதனை செய்யப்பட்டது.
கையுறைகள் நிறைந்த பெட்டிகளில் கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
சுமார் 1,300 கஞ்சா கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் விசாரணை தொடர்கிறது.
விசாரணை நடைபெற்று வருவதால் போதைப்பொருள் எங்கிருந்து வந்தது, அது எங்கு செல்லவிருந்தது ஆகிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்த ஆண்டு பாசிர் பாஞ்சாங் சோதனை நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இது 2ஆவது முறை.
அங்கு ஜனவரி மாதம் கொள்கலனில் 509 கிலோகிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
அது சிங்கப்பூர் வழி வேறு நாட்டிற்குச் செல்லவிருந்தது.

ஆதாரம் : Mediacorp Seithi