"பெண்களுக்குக் கைகொடுக்க வேண்டும்" -அமைச்சர் இந்திராணி ராஜா
வாசிப்புநேரம் -

படம்: envato.com
ஆண்கள் அதிகம் இருக்கும் துறைகளில் பெண்களுக்கு வேலை-வாழ்க்கைச் சமநிலையை மேம்படுத்த இன்னும் அதிகம் செய்யலாம் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறியிருக்கிறார்.
இளம் பெண்களை STEM எனும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் தொடர்பான துறைகளில் ஊக்குவிக்க நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
United Women Singapore அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அமைச்சர் இந்திராணி கலந்துகொண்டார்.
அதில் வேலை வாய்ப்புத் தளம் அறிமுகம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கெடுத்தோர் வேலைக்கான நேர்காணலைச் சமாளிக்கும் திறன்களைக் கற்றுக்கொண்டனர்.
அவர்களது சுய Linkedin இணையப்பக்கத்தை மேம்படுத்துவதற்கான வழிகாட்டிகளையும் பெற்றனர்.
STEM துறைகளில் ஆண் பெண் சமத்துவத்தை மேம்படுத்த ஆய்வு ஒன்று செய்யப்பட்டது.
ஆண்களின் ஆதரவோடு வேலை இடங்களில் மாற்றத்தை விரைந்து செயல்படுத்த முடியும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.