பகுதிநேர வீட்டுவேலைச் சேவைக்கான தேவை அதிகரிப்பு

pixabay
சிங்கப்பூரில் முன்பைவிட கூடுதலான குடும்பங்கள் பகுதிநேர வீட்டுவேலைச் சேவையை நாடுகின்றன.
கடந்த சில ஆண்டுகளில் அதற்கான தேவை 50 விழுக்காடு அதிகரித்துள்ளது.
பிள்ளைகளையும் மூத்தோரையும் கவனித்துக்கொள்ள "வீட்டுவேலைச் சேவைத் திட்டம்" விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களில் அது குறித்து விசாரிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அடுத்த சில மாதங்களில் மேலும் 10 பேரை வேலைக்குச் சேர்க்கவிருக்கிறது Ministry of Clean நிறுவனம்.
சரியான ஊழியரைத் தெரிவுசெய்வது பெரிய சவால்.
பிள்ளைகளையும் மூத்தோரையும் கவனித்துக்கொள்ள முறையான அனுபவம் தேவை.
அதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
துறைசார்ந்த பல நிறுவனங்கள் பகுதி நேரச் சேவை வழங்குவதில்லை.
முழுநேர ஊழியர்களுக்கும் தட்டுப்பாடு நீடிப்பதாகக் கூறுகிறார் நிறுவனத்தின் தலைவர்.
குறிப்பாக மூத்தோரைக் கவனிக்கும் தாதியர் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை என்றார் அவர்.
வேலைக்கு ஆள் கிடைப்பது மட்டும் முக்கியமில்லை. தரமான சேவை கிடைப்பதை உறுதிசெய்வதும் முக்கியம் என்பதை நிபுணர்கள் சுட்டுகின்றனர்.