Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆள்சேர்ப்பையும் சம்பள உயர்வையும் நிறுத்திவைக்க முதலாளிகள் திட்டம்

வாசிப்புநேரம் -
ஆள்சேர்ப்பையும் சம்பள உயர்வையும் நிறுத்திவைக்க முதலாளிகள் திட்டம்

(படம்: AFP/Roslan Rahman)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் பாதிக்கும் மேற்பட்ட முதலாளிகள் வரும் ஆண்டில், புதிய ஊழியர்களைச் சேர்ப்பதை நிறுத்திவைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை சிங்கப்பூர்த் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆய்வு நடத்தியது.

அதில் 20 துறைகளைச் சேர்ந்த சுமார் 300 நிறுவனங்கள் கலந்துக்கொண்டன.

பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பள உயர்வையும் புதிய ஊழியர் சேர்ப்பையும் நிறுத்திவைக்கவிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதற்குக் காரணம்?

மனிதவளச் செலவுகள் அதிகரிப்பது முக்கியச் சவாலாகக் குறிப்பிடப்பிடப்பட்டது.

ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்கும் திறன் மறுபயிற்சிக்கும் கூடுதல் செலவு ஏற்படுவது
குறித்து நிறுவனங்கள் கவலை தெரிவித்தன.

இருப்பினும் பெரும்பாலான நிறுவனங்களுக்குப் புதிய ஊழியர்களை ஈர்ப்பதும் ஏற்கனவே இருக்கும் ஊழியர்களைத் தக்க வைப்பதும் எளிதாகியுள்ளதாக சிங்கப்பூர்த் தேசிய முதலாளிகள் சம்மேளனம் தெரிவித்தது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்