Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

துவாஸ் சோதனைச்சாவடியில் பிஸ்கட் பாக்கெட்டுகளில் போதைப் பொருள்

வாசிப்புநேரம் -
துவாஸ் சோதனைச்சாவடியில் பிஸ்கட் பாக்கெட்டுகளில் போதைப் பொருள்

படம்: Central Narcotics Bureau

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 28 Sep 2026 12:20PM புதுப்பிப்பு : 28 Sep 2026 07:41PM
சிங்கப்பூரில் ஒரு மில்லியன் வெள்ளிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

துவாஸ் சோதனைச்சாவடியிலும் தெம்பனீஸில் உள்ள ஒரு வீட்டிலும் போதைப்பொருள் பிடிபட்டது.

இருவர் கைது செய்யப்பட்டனர்.

மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட மோட்டார்சைக்கிளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதன் பின்புறப் பெட்டியில் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவை விற்பனைக்கு உள்ள பிஸ்கட் பாக்கெட்டுகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தன.

ஆனால் அவற்றில் போதைப்பொருள் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டது.

கூடுதல் சோதனையில் கிட்டத்தட்ட 7 கிலோகிராம் போதைமிகு அபின் உள்ளிட்ட போதைபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

32 வயது மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டார்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அதே நாளன்று தெம்பனிஸ் ஸ்ட்ரீட் 83இல் விசாரணை நடத்தினர்.

41 வயது சிங்கப்பூரர் கைது செய்யப்பட்டார்.

அவரது வீட்டில் சுமார் 790 கிராம் போதைமிகு அபின், 600 கிராம் கஞ்சா போன்றவை சிக்கின.

கிட்டத்தட்ட 33,000 வெள்ளி பணமும் பிடிபட்டது.

குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையமும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் இன்று அது குறித்து தகவல் தெரிவித்தன.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்