சுகாதாரப் பரிசோதனைக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் - எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அதிகமான சிங்கப்பூரர்கள் சுகாதாரப் பரிசோதனைகளுக்குச் செல்கின்றனர்.
உடற்பயிற்சியிலும் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.
தேசிய மக்கள்தொகைச் சுகாதார ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
சுகாதாரப் பரிசோதனை செய்துகொண்டோரின் விகிதம், கடந்த ஆண்டைவிட 5 விழுக்காடு அதிகரித்துள்ளது.
வாரத்திற்குக் குறைந்தது 150 நிமிடம் உடற்பயிற்சி செய்வோரின் விகிதம், 2023ஆம் ஆண்டிலிருந்து 2025 வரை 8 விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்துள்ளது.
நோய் வரும்முன் தடுப்பதற்கான முயற்சிகளுடன் இது ஒத்துப்போவதாகச் சுகாதார அமைச்சு கூறுகிறது.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும், நாள்பட்ட நோய்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் இதய நோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்க உதவும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் கூறினார்.

ஆதாரம் : Mediacorp Seithi