"பெரிய குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு வேண்டும்"

(படம்:unsplash)
பெரிய குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்க ஏதுவாக நிதி உதவிக்கான தகுதிநிலையை மறுஆய்வு செய்யும்படி சமூக அமைப்புகள் கேட்டுக்கொள்கின்றன.
பராமரிப்பு, அன்றாடத் தேவைகள் போன்றவற்றில் பெரிய குடும்பங்களுக்கான செலவு அதிகரிக்கும் வேளையில் அந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
வரவுசெலவுத் திட்டத்தில் கூடுதல் ஆதரவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பங்கள் அரசாங்கத்தையே சார்ந்திருக்காமல்,சிக்கனமாய் இருக்கவும் பழக வேண்டும் என்று சமூக அமைப்புகள் கூறுகின்றன.
பிரதமர் லாரன்ஸ் வோங் கடந்த ஆண்டு தேசிய தினக் கூட்ட உரையில் பெரிய குடும்பங்களுக்கு ஆதரவான புதிய திட்டத்தை அறிவித்தார்.
இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மேலும் நற்செய்தியை அறிவிக்க அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.