Skip to main content
மின்வாகனங்களுக்கு மாறும் அதிகமான வாகன உரிமையாளர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மின்வாகனங்களுக்கு மாறும் அதிகமான வாகன உரிமையாளர்கள்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் அதிகமான வாகன உரிமையாளர்கள் மின்வாகனங்களுக்கு மாறிவருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி சுமார் 11,000 மின்வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.

கடந்த ஆண்டைவிட அந்த எண்ணிக்கை 40 விழுக்காடு அதிகம்.

ஆனால் சாலைகளில் செல்லும் ஏனைய வாகனங்களுடன் ஒப்பிடுகையில் மின்வாகனங்களின் விகிதம் குறைவாகவே உள்ளது.

சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான வாகனமோட்டிகளுக்கு மின்வாகனம் குறித்து அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை என்பது கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

 வாகனம் வாங்க வரும் 250 பேரில் 22 விழுக்காட்டினர் மட்டுமே மின் வாகனங்களைப் பற்றிய விவரங்களை ஆராய்கின்றனர்.

Cycle & Carriage Singapore கார் நிறுவனம் நடத்திய அண்மை ஆய்வு ஒன்றில் அது தெரியவந்தது.

மின் வாகனம் என்றால் என்னவென்று தெரியவில்லை என 7 விழுக்காட்டினர் கூறினர்.

மின்கலங்களைக் கொண்டு மின் வாகனங்கள் இயங்குகின்றன என்பதைத் தவிர மற்ற விவரங்கள் தெரியாது எனப் பாதிப் பேர் கூறினர்.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அண்மைத் தகவல்களின்படி தீவு முழுவதும் கிட்டத்தட்ட 4,900 மின்னூட்ட முகப்புகள் உள்ளன.

2030க்குள் அவற்றை 60,000க்கு உயர்த்தத் திட்டமிடப்படுகிறது.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்