Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இம்மாத இறுதிவரை இடியுடன் கூடிய மழை

சிங்கப்பூரில் இம்மாத இறுதிவரை, இடியுடன் கூடிய மழை, மேலும் அதிகமாய் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் இம்மாத இறுதிவரை, இடியுடன் கூடிய மழை, மேலும் அதிகமாய் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

பொதுவாக இந்தக் காலத்தில், வெப்பமான வானிலை நிலவுவதோடு லேசான காற்றும் வீசும்.

சில சமயங்களில் இடியுடன் கூடிய கனத்த மழையும் பெய்வதுண்டு.

இந்நிலையில், அடுத்த சில நாள்களில் காலையில் இடியுடன் கூடிய கனத்த மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

சுமத்ராவிலிருந்து கொந்தளிப்பான திடீர்க் காற்று
மலாக்கா நீரிணையில் இருந்து தென் சீனக் கடல்வரை கடந்து செல்வது அதற்குக் காரணம்.

பெரும்பாலான நாள்களில், வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸுக்கும் 33 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்டிருக்கும்.

சில நாள்களில், வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸுக்கு உயரலாம்.

சில இரவுகளில், குறிப்பாகக் கிழக்கு, தெற்கு வட்டாரங்களில், தட்பநிலை குறைந்தது 28 டிகிரி செல்சியஸாக இருக்கலாம் என்று ஆய்வகம் கூறியது.

- CNA/lk(gs) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa