Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உடற்குறையுள்ளோருக்குச் சிறப்பான உதவி வழங்க மருத்துவ ஊழியர்களுக்குப் பயிற்சி

வாசிப்புநேரம் -
உடற்குறையுள்ளோருக்குச் சிறப்பான உதவி வழங்க மருத்துவ ஊழியர்களுக்குப் பயிற்சி

படம்: CNA/Mak Jia Kee

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பலதுறை மருந்தக ஊழியர்கள் தொடர்புத்திறன் குறைபாடு, அறிவுத்திறன் குறைபாடு உள்ளோரைச் சிறப்பாக கையாளப் பயிற்சி பெறவிருக்கின்றனர்.

அடுத்த ஆண்டுமுதல் பயிற்சி வழங்கப்படும்.

சிக்கலான தேவையுள்ள சிலருக்குச் சிறந்த ஆதரவு வழங்கவும் சில பலதுறை மருந்தகங்கள் தயாராய் இருக்கும் என்று சுகாதாரத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் (Rahayu Mahzam) சொன்னார்.

சமூகத்தின் பல்வேறு தேவையைப் பூர்த்திசெய்யும் சுகாதாரப் பராமரிப்புச் செயல்முறைக்குச் சிங்கப்பூர் மாறுவதாக அவர் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பலதுறை மருந்தகங்களில் புதிய சுகாதார அனுமதி அட்டை அறிமுகப்படுத்தப்படும்.

முக்கிய மருத்துவத் தகவல்கள், தொடர்பு, உணர்வுத் தேவைகள் போன்ற ஆவணங்களை சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களிடம் உடற்குறையுள்ளோர் பகிர்ந்துகொள்ள அது உதவும்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்