இளம் ஊழியர்கள் முன்பைவிட விரைவாக வெளிநாட்டு அனுபவம் பெற வாய்ப்பு
This audio is generated by an AI tool.
இளம் ஊழியர்கள் வெளிநாட்டு அனுபவங்களையும் பயிற்சி வாய்ப்புகளையும் இந்த ஆண்டு முன்கூட்டியே பெறுவார்கள்.
திறனாளர் குழுவை வலுப்படுத்துவதற்கும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின்கீழ் அது சாத்தியமாகிறது.
புதிய பட்டதாரிகளுக்கான பயிற்சி வாய்ப்புகளும் மேம்படுத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு பட்டம் பெறுபவர்கள் GRIT எனும் பட்டதாரிகளுக்கான தொழில்துறைப் பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
முன்னதாக 2025 ஆண்டு பட்டம் பெற்றவர்களே இதற்கு விண்ணப்பிக்க முடிந்தது.
புதிய பட்டதாரிகள் வளரும் துறைகளில் வேலை அனுபவம் பெறவும் நீண்டகால வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் திட்டம் உதவுகிறது.
இந்தத் திட்டம் பலனளித்திருப்பதாக முதலாளிகள் தம்மிடம் கூறியதை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் சுட்டினார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 400க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகள் பயிற்சிகளில் சேர்ந்துள்ளனர்.
விண்ணப்ப நடைமுறை துரிதமாக்கப்படும்.
சந்தை நிலவரத்தைப் பொறுத்து, தேவைப்பட்டால் மேலும் பல வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படலாம்.