சிங்கப்பூர் வரலாற்றில் இதுவரை பதிவான ஆக வெப்பமான நாள்

(படம்: AFP/Roslan Rahman)
சிங்கப்பூரில் நேற்று (12 மே) சுவா சூ காங்கில் (Choa Chu Kang) வெப்பநிலை 36.2 டிகிரி செஸ்சியஸாகப் பதிவானது.
அது இந்த ஆண்டில் (2023) பதிவான ஆகச் சூடான நாள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் இவ்வாண்டின் ஆக வெப்பமான நாள்கள்:
14 ஏப்ரல் - 36.1 டிகிரி செல்சியஸ் (உட்லண்ட்ஸ்)
4 ஏப்ரல் - 35. 9 டிகிரி செல்சியஸ் (பாயா லேபார்)
சிங்கப்பூர் வரலாற்றில் இதுவரை பதிவான ஆக வெப்பமான நாள் எது தெரியுமா?
17 ஏப்ரல் 1983.
அன்று தெங்காவில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைத் தொட்டது.
சிங்கப்பூரில் பொதுவாக மே, ஜூன் மாதங்கள் என்றால் சூடான வானிலைதான் இருக்கும் என நம்மில் பலருக்குத் தோன்றும்.
ஆனால் வரலாற்றில் இதுவரை பதிவான ஆக வெப்பமான மாதம் எது தெரியுமா?
மார்ச் 1998.
அப்போது மாதாந்திரச் சராசரி வெப்பநிலை 29.5 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.