Skip to main content
AYE விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

AYE விபத்து - 38 வயது ஓட்டுநர் லாரியின் அடியில் சிக்கி மரணம்

வாசிப்புநேரம் -
AYE விபத்து - 38 வயது ஓட்டுநர் லாரியின் அடியில் சிக்கி மரணம்

படம்: Facebook/Itu Ini

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் (AYE) நடந்த சாலை விபத்தில் 38 வயது ஓட்டுநர் மாண்டார்.

துவாஸை (Tuas) நோக்கிச் செல்லும் சாலையில் நேற்று மாலை நடந்த சம்பவத்தில் மோட்டார்சைக்கிளும் லாரியும் மோதின.

அது குறித்து மாலை 6.20 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) 8 Worldஇடம் தெரிவித்தது.

மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் லாரியின்கீழ் சிக்கிக்கொண்டதாக நம்பப்படுகிறது.

சாலையில் ரத்தக் கரை படிந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன.

நினைவிழந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓட்டுநர் மாண்டார்.

ஓட்டுநர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் வேலை அனுமதி பெற்று இங்கு பணியாற்றுகிறார் என்றும் சில இணையவாசிகள் கூறினர்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்