Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் திடீர்ச் சோதனை - 66 பேருக்கு அபராதம்

வாசிப்புநேரம் -

உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் நடத்தப்பட்ட திடீர்ச் சோதனையில் மொத்தம் 66 மோட்டார்சைக்கிளோட்டிகளுக்கு வெவ்வேறு குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமாகச் சத்தத்தை ஏற்படுத்தியதற்காக 25 பேர் பிடிபட்டனர்.

நால்வர், புகைக் கட்டுப்பாட்டு அளவை மீறியதாகவும், 24 பேர் முறையற்ற வாகன உரிம அடையாளத்தைப் பொருத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

13 பேர் முறையான ஓட்டுநர் உரிமம் கொண்டிருக்கவில்லை என்றும் வாகனத்திற்கான காப்பீட்டைப் பெற்றிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தேசியச் சுற்றுப்புற அமைப்பு, சிங்கப்பூர்க் காவல்துறை, நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை அந்தக் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தன.

சுற்றுச்சூழல், சாலைப் பாதுகாப்பு ஆகியவற்றின் விதிமுறைகளை வாகனமோட்டிகள் பின்பற்றுமாறு நினைவூட்டப்பட்டது.

இதுபோன்ற திடீர்ச் சோதனைகள் வழக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதாரம் : CNA/at(gs)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்