இந்தோனேசிய எரிமலை வெடிப்பில் மாண்ட சிங்கப்பூரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன
படம்: CNA/Wisnu Agung Prasetyo
இந்தோனேசியாவின் டுக்கோனோ (Dukono) எரிமலையில் காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
சம்பவத்தில் மாண்டதாக உறுதிப்படுத்தப்பட்ட மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுவிட்டன.
அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள்.
மற்றவர் இந்தோனேசியர்.
சிங்கப்பூரர்களான 30 வயது ஹெங் வென் சியாங் திமத்தி (Heng Wen Qiang Timothy), 27 வயது ஷாஹின் முஹ்ரிஸ் பின் அப்துல் ஹமிட் (Shahin Muhrez bin Abdul Hamid) ஆகியோரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன.
அந்தப் பணி நிறைவடைய 9 மணி நேரத்துக்கு மேல் ஆனது.
மழை இடையூறாக இருந்தது.
சுமார் 100 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
சிங்கப்பூரர்களும் 10 இந்தோனேசியர்களும் காப்பற்றப்பட்டனர்.
சிங்கப்பூரர்கள் இன்று நாடு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எரிமலை கடந்த வெள்ளிக்கிழமை வெடித்தது.
எரிமலையின் சீற்றம் குறையவில்லை.
இதனால் எரிமலையைச் சுற்றியுள்ள 4 கிலோமீட்டர் தூரத்துக்கு உட்பட்ட பகுதிகளில்அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.