Skip to main content
இந்தோனேசிய எரிமலை வெடிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

இந்தோனேசிய எரிமலை வெடிப்பு- மாண்ட சிங்கப்பூரர்களின் உடல்களை அடையாளங்காண 2 வாரங்கள் ஆகலாம்

வாசிப்புநேரம் -
இந்தோனேசிய எரிமலை வெடிப்பு- மாண்ட சிங்கப்பூரர்களின் உடல்களை அடையாளங்காண 2 வாரங்கள் ஆகலாம்

படம்: CNA/Wisnu Agung Prasetyo

இந்தோனேசியாவின் டுக்கோனோ (Dukono)  எரிமலை வெடிப்பில் மாண்ட இரண்டு சிங்கப்பூரர்களின் உடல்களை அடையாளங்காண குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும்.

இந்தோனேசிய அதிகாரிகள் அதனைத் தெரிவித்தனர்.

மருத்துவர்கள் உட்பட 9 நிபுணர்கள் அதற்கான பணியில் இறங்கியுள்ளனர்.

அது முடிந்த பிறகே உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுமா அல்லது இந்தோனேசியாவிலேயே புதைக்கப்படுமா என்பது முடிவெடுக்கப்படும்.

அவர்களின் படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் இந்தோனேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்களது பல் மருத்துவத் தகவல்களுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். அது கிடைத்த பின்னரே DNA மரபணுச் சோதனை செய்யமுடியும்.

ஜக்கார்த்தாவில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகத்துடன் இணைந்து பணியாற்றவிருப்பதாக இந்தோனேசிய அதிகாரிகள் கூறினர்.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்