Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்குச் சென்ற 700 பேர்

வாசிப்புநேரம் -
வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்குச் சென்ற 700 பேர்

Ooi Boon Keong/TODAY

சிங்கப்பூரில் வாடகை வீட்டில் இருப்போரில் 700 பேர் கடந்த ஆண்டு வீட்டு உரிமையாளர்களாகிவிட்டதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில், வாடகை வீட்டிலிருந்த 7,800க்கும் மேற்பட்டோர் சொந்த வீடுகளை  வாங்கியிருக்கின்றனர்.

கழகம் வழங்கியுள்ள மானிய ஆதரவின் மூலம் அது சாத்தியமானது.

வாடகை வீட்டில் வசிக்கும் இன்னும் 2,300 பேர், சொந்த வீடுகளை வாங்குவதற்கு ஆதரவு வழங்கப்படுவதாகக் கழகம் குறிப்பிட்டது.

அவர்கள் புது வீடுகளைத் தெரிவு செய்துவிட்டதாகவும், அதன் கட்டுமானப் பணிகள் முடிப்பதற்குக் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அதன் புதுத்தொடக்க வீட்டுத் திட்டத்தை மேம்படுத்தவிருக்கிறது.

வீட்டு விலைகள் கட்டுப்படியாக இருப்பதற்கும், பலதரப்பட்ட வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அது மேம்படுத்தப்படுகிறது.

அடுத்த மாதம் வெளியிடப்படும் புது வீடுகளுடன் அது நடப்புக்கு வரும்.

தற்போது வாடகை வீட்டில் இருப்போர், மூவறை வீடுகளை வாங்க தகுதி பெற்றால், குறைந்த குத்தகை காலத்தில் அதைப் பெற்றுகொள்ள தெரிவு வழங்கப்படும்.

அதற்கான சில நிபந்தனைகளும் உண்டு.

தற்போது, நீக்குப்போக்கான ஈரறை வீட்டுத் திட்டத்தின் கீழ் 45 ஆண்டுகள் முதல் 65 ஆண்டுகள் வரை குத்தகை காலம் கொண்ட ஈரறை வீடுகளை மட்டுமே அவர்கள் வாங்க முடியும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa