Skip to main content
நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தரக்குறைவான மின்னஞ்சல்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தரக்குறைவான மின்னஞ்சல்கள் - 72 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தரக்குறைவான மின்னஞ்சல்கள் - 72 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

(படம்: CNA/Wallace Woon)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மார்சிலிங் - இயூ டீ நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நகர மன்ற ஊழியருக்கும் தரக்குறைவான மின்னஞ்சல் அனுப்பியதாக 72 வயது ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூரரான மாணிக்கம் மனோஹர் (Manickam Manohar) நாடாளுமன்ற உறுப்பினர் ஹானி சோவிற்கு (Hany Soh) மின்னஞ்சல் அனுப்பியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அந்தச் சம்பவம் சென்ற ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தது.

நகர மன்ற ஊழியர் திரு நியோ யெங் குவாங் (Neo Yeng Kwang) மீது அவர் குறைகூறியதாகச் சொல்லப்பட்டது. அவர் திருடியதாகவும் மோசடி செய்ததாகவும் மாணிக்கம் மின்னஞ்சல் அனுப்பியதாகக் கூறப்பட்டது.

திருவாட்டி சோவிற்கு அவர் 5 மின்னஞ்சல்கள் அனுப்பிய சந்தேகம் உள்ளது.

திருவாட்டி சோ மோசடிப் பணத்தைப் பெற்றதாகவும் தமது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் மாணிக்கம் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

மாணிக்கம் மீது 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டு மாணிக்கம், திருவாட்டி சோவைத் திட்டி எழுதிய தாள்களை உட்லண்ட்ஸ் புளோக்குகளில் ஒட்டியதாக நம்பப்படுகிறது.

மாணிக்கம் ஏற்கனவே அதுபோன்ற குற்றங்களுக்கு விசாரிக்கப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

வழக்கு விசாரணை அடுத்த மாதம் நடைபெறும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 12 மாதம்வரை சிறைத்தண்டனை, 5,000 வெள்ளிவரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்