Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

திரு. லியோங் முன் வாய் நாடாளுமன்றத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படக்கூடும்

வாசிப்புநேரம் -

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் முன் வாய் (Leong Mun Wai) நாடாளுமன்றத்தில் நடந்துகொண்ட விதத்திற்காக அவருக்கு எதிராகக் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படக்கூடும்.

நாடாளுமன்றச் சிறப்புரிமையையும் விதிமுறைகளையும் அவர் பலமுறை மீறியதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் (K Shanmugam) கூறியிருக்கிறார். 

அடுத்தகட்ட நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாக அவர் கூறினார். 

தற்சமயம் எந்த ஒரு மன்ற உறுப்பினர் மீதும் புகார் அளிக்கப்படவில்லை என்று நாடாளுமன்றச் செயலகம் தெரிவித்தது.  

திரு. லியோங்கும் திரு. சண்முகமும் மன்றத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், திரு. லியோங் மன்ற நாயகரிடம் மன்னிப்புக் கேட்டார். அவருடைய தொனியைக் கவனித்துக்கொள்ளுமாறு திரு. லியோங்கிற்கு அறிவுறுத்தப்பட்டது. 

அந்த விவகாரம் குறித்துத் திரு. லியோங் Facebookஇல் பதிவிட்டிருந்தார். அதில் தவறான தகவல்களும் குற்றச்சாட்டுகளும் இடம்பெற்றிருந்ததாக அமைச்சர் சண்முகம் சுட்டினார். 

திரு. லீ சியென் யாங்கும் (Lee Hsien Yang) திருமதி லீ சுவெட் ஃபெர்னும் (Lee Suet Fern) தப்பிச்சென்றதாகத் தாம் கூறியது சரியல்ல என்று திரு. லியோங் குறிப்பிட்டதாக அமைச்சர் சொன்னார். 

அவர்கள் விசாரிக்கப்பட்டதை வெளியிட்டதன் மூலம் தாமும் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியனும் (Teo Chee Hean) குற்றவியல் வழக்குகள் பற்றிப் பொதுமக்களிடையே குறிப்பிட்ட கருத்தை ஏற்படுத்தும் தளமாக நாடாளுமன்றத்தை மாற்றக்கூடிய ஆபத்தான முயற்சியில் ஈடுபட்டதாகவும் திரு. லியோங் சொன்னதையும் திரு. சண்முகம் குறிப்பிட்டார். 

இவற்றில் உண்மையில்லை என்றும் இவை கையாளப்படவேண்டியவை என்றும் அமைச்சர் சொன்னார்.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்