Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"விவாகரத்தை எதிர்கொள்ளும் முஸ்லிம் குடும்பங்களுக்குக் கூடுதல் பாதுகாப்புத் தேவை"

வாசிப்புநேரம் -
"விவாகரத்தை எதிர்கொள்ளும் முஸ்லிம் குடும்பங்களுக்குக் கூடுதல் பாதுகாப்புத் தேவை"

(படம்: Envato Elements)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் விவாகரத்தை எதிர்கொள்ளும் முஸ்லிம் குடும்பங்களுக்கு மேலும் தெளிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாகப் பிள்ளைகளுக்கு அவசரப் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்; நீதிமன்ற உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படுவது உறுதிசெய்யப்படவேண்டும்.

முஸ்லிம் சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது உறுப்பினர்கள் அந்தக் கருத்துகளை முன்வைத்தனர்.

திருத்தங்களின்கீழ் சில விவாகரத்து நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். 

குழந்தைப் பராமரிப்பு உரிமை தொடர்பில் எழக்கூடிய சர்ச்சைகளைக் கையாள ஷரியா (Syariah) நீதிமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்படும்.

பிள்ளைகளுக்கான பராமரிப்புத் தொகையைப் பெறுவதில் சில குடும்பங்கள் தாமதத்தைச் சந்திக்கின்றன.

அதுகுறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கறை தெரிவித்தனர்.

திருமணத்தின்போது வாங்கப்பட்ட சொத்துகளை விற்க நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிரமங்களும் சுட்டிக்காட்டப்பட்டன.

நிதியாதரவு அல்லது நிவாரணம் கிடைக்கக் குடும்பங்கள் எவ்வளவு காலம் காத்திருக்கவேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பப்பட்டது.
 

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்