லீ சியென் யாங்கின் Facebook பதிவுக்கு அமைச்சர்கள் சண்முகமும் விவியன் பாலகிருஷ்ணனும் பதிலடி
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் அமைச்சர்கள் திரு கா சண்முகம், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிரான அவதூறுக்காக இருவருக்கும் திரு லீ சியன் யாங் (Lee Hsien Yang) 600,000 வெள்ளிக்கும் மேல் செலுத்தியுள்ளார்.
அமைச்சர்கள் Ridout ரோட்டில் வாடகைக்கு எடுத்த அரசாங்க வீடுகள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததற்காக இழப்பீடு செலுத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
திரு லீ சியென் யாங் அது குறித்து Facebookஇல் பதிவிட்டிருந்தார்.
திரு லீயின் பதிவுக்குப் பதிலளித்து Facebookஇல் அமைச்சர்கள் திரு சண்முகமும் டாக்டர் பாலகிருஷ்ணனும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
திரு லீ இங்கிலாந்து நீதிமன்றத்தில் தம்மீது வழக்குத் தொடுக்குமாறு கேட்டிருந்தார்.
சிங்கப்பூரில் அவர் கூறிய அவதூறான கருத்துகளுக்காகச் சிங்கப்பூரில் அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டதாக அமைச்சர்கள் அப்போது கூறியிருந்தனர்.
சிங்கப்பூரில் வழக்கு விசாரணை நடந்தபோது திரு லீ அதில் கலந்துகொள்ளவில்லை.
அமைச்சர்களிடம் கேள்வி கேட்கவும் திரு லீயிடம் குறுக்கு விசாரணை நடத்தவும் அது வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கும்.
திரு லீ தாம் செலுத்தியுள்ள இழப்பீட்டுத் தொகை அமைச்சர்கள் அவர்கள் வசிக்கும் Ridout வீடுகளுக்குச் செலுத்தும் 13.5 மாத வாடகைக்கு ஒப்பானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
திரு லீயிடமிருந்து இழப்பீடாகப் பெறும் தொகையை அறநிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கவிருப்பதையும் அமைச்சர்கள் சுட்டினர்.

ஆதாரம் : Others