Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"ஒரு முழுப் பயண தூரத்தைப் பொறுத்தே பயணக் கட்டணம் முடிவு செய்யப்படுகிறது"

வாசிப்புநேரம் -
பொதுப் போக்குவரத்துப் பயணக் கட்டணங்கள் சரியாகக் கணக்கிடப்படுவதை உறுதிசெய்ய ரயில், பேருந்து மாற்று விதிகள் (Transfer Rules) உதவுவதாகத் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் (Jeffrey Siow) கூறியுள்ளார்.

ரயில்,சேவை மாற்று விதிகளுக்கான அடிப்படை என்ன? அவற்றில் கட்டுப்பாடு அவசியமா போன்ற கேள்விகள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டன.

பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள், ஒரு முழுப் பயணத்துக்கு ஆகும் தூரத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.

ரயில் நிலையங்களில் 15 நிமிடத்துக்குள் மற்றொரு ரயிலுக்கு மாறும்போது குறைவான கட்டணம் விதிக்கும் திட்டம் 2018ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

நியூட்டன், தெம்பினிஸ், புக்கிட் பாஞ்சாங் போன்ற ரயில் நிலையங்களில் வெளியேறிவிட்டு திரும்பக் கட்டணம் செலுத்தி மற்றொரு ரயில் பாதைக்கு மாறிச்செல்ல ஏதுவாக 15 நிமிடம் முடிவு செய்யப்பட்டது.

ரயிலிருந்து பேருந்து, பேருந்திலிருந்து மற்றொரு பேருந்து மாற்றங்களுக்குக் கட்டணக் கழிவு பெற சுமார் 45 நிமிடம் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.

பயணங்களில் தன்மையைப் பொறுத்து அவை முடிவு செய்யப்பட்டதாகத் திரு சியாவ் கூறினார்.

ஒரே பேருந்துச் சேவையைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது, ஒரே ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி, பின்பு மீண்டும் உள்நுழைவது ஆகியவற்றுக்குக் கட்டண மாற்றங்கள் பொருந்தாது என்று அமைச்சர் சியாவ் சொன்னார்.

ஒரே பயணத்தில் அவ்வாறு செய்வதற்கு எந்த காரணமும் இல்லை என்றார் அவர்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்