Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பிள்ளைகளைப் பாதுகாக்கப் புதிய சமூகச் சேவை ஒருங்கிணைப்பு நிலையம் அமைக்கப்படும்

வாசிப்புநேரம் -
பிள்ளைகளைப் பாதுகாக்கப் புதிய சமூகச் சேவை ஒருங்கிணைப்பு நிலையம் அமைக்கப்படும்
படம்: Instagram/@simonboyyyyyyy
சிங்கப்பூரில் பிள்ளைகளை மேம்பட்ட வழியில் பாதுகாக்கப் புதிய சமூகச் சேவை ஒருங்கிணைப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.

அது குறித்து சமூகச் சேவை ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) நாடாளுமன்றத்தில் கூறினார்.

4 வயதுச் சிறுமி மேகன் குங் (Megan Khung) சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் பல குறைகள் இருந்ததாக அண்மையில் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டது.

அதனை அடுத்து பிள்ளைகள் விவகாரத்தில் உள்ள செயல்முறைகளை வலுப்படுத்தப் புதிய சமூகச் சேவை ஒருங்கிணைப்பு நிலையம் அமைக்கப்படுவதாகத் திரு லீ சொன்னார்.

தொழில்நுட்பத்தின் துணையுடன் பிள்ளைகளுக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவங்களை விரைவில் அடையாளம் கண்டு, திறம்பட கையாள அது உதவும்.

பிள்ளைகள் காணாமல்போகும் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையுடன் சேர்ந்து செயல்படும் நடைமுறைகளும் மேம்படுத்தப்படும் என்று திரு லீ கூறினார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்