Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உணவு-பானக் கடைகளின் உள்புறமும் வெளிப்புறமும் அமர்ந்து உணவு உண்ணத் தற்காலிகத் தடை

முகக்கவசத்தை அகற்றவேண்டிய உள்புற நடவடிக்கைகளின்போது, கொரோனா கிருமி மேலும் அதிகமாகப் பரவும் என்பது அண்மையில் அடையாளம் காணப்பட்ட சமூக அளவிலான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மூலம் உறுதியாகி இருக்கிறது. 

வாசிப்புநேரம் -
உணவு-பானக் கடைகளின் உள்புறமும் வெளிப்புறமும் அமர்ந்து உணவு உண்ணத் தற்காலிகத் தடை

(படம்: Try Sutrisno Foo)

முகக்கவசத்தை அகற்றவேண்டிய உள்புற நடவடிக்கைகளின்போது, கொரோனா கிருமி மேலும் அதிகமாகப் பரவும் என்பது அண்மையில் அடையாளம் காணப்பட்ட சமூக அளவிலான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மூலம் உறுதியாகி இருக்கிறது.

அதன் காரணமாக, உணவங்காடிகள், உணவு நிலையங்கள், உணவு-பானக் கடைகளின் உள்புறமும் வெளிப்புறமும் அமர்ந்து உணவு உண்ணத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உணவுப் பொட்டலச் சேவை, விநியோகச் சேவைக்குத் தடையில்லை.

உள்புறங்களில் நடத்தப்படும் கடினமான உடற்பயிற்சி வகுப்புகள், தனியார் அல்லது குழு உடற்பயிற்சி நடவடிக்கைகள் போன்றவைக்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகப் பராமரிப்புச் சேவைகள், உடற்பிடிப்புச் சேவைகள் போன்றவற்றுக்கும் இப்போதைக்கு அனுமதி இல்லை.

மேலும், பாடுதல், காற்றிசைக் கருவிகளை வாசித்தல் ஆகியவற்றுக்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், முகக்கவசத்தை அகற்றிவிட்டுப் பல் மருத்துவரையோ, மருத்துவரையோ கண்டு சிகிச்சையும் ஆலோசனையும் பெறுவதற்குத் தடை இல்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்