Skip to main content
அமெரிக்க வரி: சிங்கப்பூருக்கு 10%, மற்ற நாடுகளுக்கு?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

அமெரிக்க வரி: சிங்கப்பூருக்கு 10%, மற்ற நாடுகளுக்கு?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க வரி விதிப்புப் பேச்சுவார்த்தைக்கான காலக்கெடு முடிவடைந்துள்ளது.

கடைசி நேரம் வரை பல நாடுகள் தங்களுக்குச் சாதகமான வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள முற்பட்டன.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் புதிய வர்த்தக வரிகளை அறிவித்துள்ளார்.

காலக்கெடு முடிவதற்கு இரண்டு மணிநேரம் முன்பாகத் திரு டிரம்ப் பல நிர்வாக ஆணைகளில் கையெழுத்திட்டார்.

புதிய வரிகள் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடப்புக்கு வரும்.

சிங்கப்பூருக்கு 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்பதை வர்த்தக, தொழில் அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது.

சிங்கப்பூருக்கான வரிகளைக் குறைப்பதில் அமெரிக்கா ஆர்வம் காட்டவில்லை என்று பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா சென்றிருந்த துணைப்பிரதமர் கான் கிம் யோங் (Gan Kim Yong) முன்னதாகக் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தை அணுக்கமாகக் கண்காணிப்பதாக அமைச்சு கூறியது.

தென்கிழக்காசியாவில் ஒவ்வொரு நாட்டுக்கும் வரிகள் வேறுபடுகின்றன.

மலேசியா: 25 விழுக்காட்டிலிருந்து 19 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மியன்மார், லாவோஸ்: 40 விழுக்காடு.

வியட்நாம்: 20 விழுக்காடு.

தாய்லந்து, கம்போடியா: 36 விழுக்காட்டிலிருந்து 19 விழுக்காடாகக் குறைந்தது.

நிபந்தனையற்ற உடனடிச் சண்டைநிறுத்தத்திற்கு இரு நாடுகளும் சம்மதித்ததால் வரி குறைக்கப்பட்டது.
 

மேலும் செய்திகள் கட்டுரைகள்