Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"என் அப்பா கனிவானவர்... அன்பானவர்" - பிரிட்டனில் மனைவியைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சிங்கப்பூரரைப் பற்றி அவரின் மகன்

வாசிப்புநேரம் -

பிரிட்டனில் மனைவியைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிங்கப்பூரரின் மகன் அவரைக் கனிவானவர் என்றும் அன்பானவர் என்றும்  வருணித்திருக்கிறார். 

கடந்த ஆண்டு (2021) டிசம்பர் 6 ஆம் தேதி பிரிட்டனிலுள்ள நியூகாசல் ஹோட்டல் அறை ஒன்றில் அலன் ஃபோங் (Alan Fong) என்பவரின் மனைவி ஈவ்லின் பெக் (Evelyn Pek) மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.  

இருவரும் ஐரோப்பாவிற்குச் சுற்றுலா மேற்கொண்ட நிலையில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.  ஃபோங் அவரின் மனைவியைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால் அதனை அவர் மறுத்தார். 

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த வழக்கு விசாரணையின்போது அலனின் மூத்த மகன் அலோன்சோ ஃபோங் (Alonso Fong) தாயார் இறந்த நாளன்று அவரது கைத்தொலைபேசியிலிருந்து அனுப்பிய சில குறுந்தகவல்களைப் பற்றி அரசுத்தரப்பு வழக்கறிஞர் விசாரித்தார். 

அவற்றில் ஒன்றில் 'என் அப்பா எனக்கு இப்போதுதான் தொலைபேசியில் அழைத்தார். அவர் தெரியாமல் என் அம்மாவைக் கொன்றுவிட்டதாக என்னிடம் சொன்னார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  

நியூகாசலில் உள்ள ஹோட்டலை அடைந்தவுடன் மீண்டும் ஒரு குறுந்தகவலை அலோன்சோ, அவரின் தோழிக்கு அனுப்பியதாகக் கூறினார். 

"நான் குழப்பமாக இருக்கிறேன்... அவர் என் அம்மவுடன் சண்டைபோட்டதாகவும் அவரது வாயை மூடியதாகவும் சொன்னார். இப்போது என் அம்மா மயக்கநிலையில் இருப்பதாகக் கூறுகிறார்..." 

"யாரிடமும் இதைப் பற்றிச் சொல்லாதே... அங்கு என்ன நடந்தது என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை" 

என்று அலோன்சோ அவரின் தோழிக்குக் குறுந்தகவல் அனுப்பியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்