Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிளமெண்டி கழக புளோக்கில் மரணம் - 50 வயது ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -

கிளமெண்டி வட்டாரத்தில் ஒருவரைக் கொலை செய்ததாக 50 வயது ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தோ சீ ஹோங் (Toh Chee Hong) என்றவர் 41 வயது ஆடவரை நேற்று முன்தினம் (21 அக்டோபர்) கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கிளமெண்டி அவென்யூ 4இல் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் புளோக் 311Bஇலிருந்து (Block 311B Clementi Avenue 4) நேற்று முன்தினம் (21 அக்டோபர்) மாலை 5 மணிக்கு அழைப்பு வந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.

அங்கு சுயநினைவற்ற நிலையிலிருந்த 41 வயது ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் பின்னர் மாண்டார்.

தோ சம்பவ இடத்தில் கைதுசெய்யப்பட்டார்.

இருவரும் ஒருவரை ஒருவர் ஏற்கனவே அறிந்தவர்கள் என்பது ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மாண்ட ஆடவர் அடித்தளக் குழுவில் தொண்டூழியராகப் பணியாற்றியவர்.

ஆனால் சந்தேக நபர் அடித்தளக் குழுவில் பணியாற்றியதாக வெளிவந்த வதந்திகளை மக்கள் கழகம் மறுத்தது.

தோ ஒரு வாரம் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்