வெளிநாட்டில் தேசிய கீதத்தைக் கேட்ட சிங்கப்பூரர்கள்..இன்ப அதிர்ச்சி
வாசிப்புநேரம் -
(படம்: tiktok/@wantwotwee)
வீட்டை விட்டு வெகு தூரம் இருக்கும்போது ஒரு விதத் தனிமையை நம்மில் பலர் உணர்வோம்...
அதுவும் வெளிநாட்டில் இருக்கும்போது சிங்கப்பூரை நினைவுபடுத்தும் அம்சங்களை தேடுவோம்...
ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜார்ஜியாவுக்குச் (Georgia) சென்ற தம்பதியின் அனுபவம் இணையவாசிகளைக் கவர்ந்துள்ளது.
தம்பதி Narikala கோட்டை எனும் இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அருகில் சாலையோர இசைக்கலைஞர்கள் நின்று கொண்டிருந்தனர்.
ஒருவருக்கு தம்பதி சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்திருந்தது.
Accordion எனும் இசைக்கருவியை வைத்திருந்த அவர் உடனடியாக சிங்கப்பூர் தேசிய கீதத்தை வாசிக்கத் தொடங்கினார்.
தம்பதியோ மெய்மறந்து நின்றனர்.
இசைக்கலைஞர் 'Majulah Singapura' எனும் வரியையும் தெளிவாகப் பாடினார்.
அவரது படைப்பைக் காட்டிய காணொளி சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.
இசைக்கலைஞருக்கு எப்படி சிங்கப்பூரின் தேசிய கீதம் தெரியும் என்று இணையவாசிகள் பலர் கேட்டிருந்தனர்.