Skip to main content
மைனாவின் வாயையும் இறக்கைகளையும் டேப் கொண்டு ஒட்டிய பெண்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் trending

மைனாவின் வாயையும் இறக்கைகளையும் டேப் கொண்டு ஒட்டிய பெண் - இணையவாசிகள் கோபம்

வாசிப்புநேரம் -
மைனாவின் வாயையும் இறக்கைகளையும் டேப் கொண்டு ஒட்டிய பெண் - இணையவாசிகள் கோபம்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஒரு மைனாவின் வாயையும் இறக்கைகளையும் டேப் (Tape) கொண்டு ஒட்டிவிட்டு அதைத் துன்புறுத்தும் காணொளி இணையவாசிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைனா ஒன்று தனது வீட்டிற்குள் நுழைவதாகவும் தனது உணவைச் சாப்பிடுவதாகவும் ஒரு பெண் சில காணொளிகளைப் பதிவிட்டார்.

அதில் ஒரு மைனாவின் வாய், இறக்கை, கால் ஆகிய பகுதிகளை டேப் கொண்டு ஒட்டிவைத்துப் பறக்கவிடாமல் செய்வதைக் காணொளியில் பார்க்கமுடிந்தது.

பறவையை ஒரு பையில் வைத்து அதைத் திட்டுவதும் மிரட்டுவதும் காணொளியில் தெரிந்தது.

இணையவாசிகள் பலர் அந்தப் பெண்ணின் செயலைச் சாடினர்.

"உங்கள் வாயையும் கைகளையும் கட்டினால் உங்களுக்கு எப்படி இருக்கும்?" என்று இணையவாசி ஒருவர் கொந்தளித்தார்.

இது குறித்து 'செய்தி' வனவிலங்குப் பாதுகாப்பு அமைப்பான ACRESஇடம் கேள்விகள் கேட்டது.

பறவைகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்பத் தங்களைச் சரிப்படுத்திக் கொண்டு மனிதர்களுடன் வாழக்கூடியவை என்று ACRES சொன்னது.

அதனால் சில நேரங்களில் அவை நமக்குத் தொல்லையாகத் தோன்றலாம். ஆனால், அவையும் உயிர்வாழ முயலும் உயிரினங்கள்தான் என்றும் அது கூறியது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்