Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"நாளை நமதே" - மாறும் வேலைச்சூழலில் உங்களுக்குத் தெரியவேண்டியவை - 'செய்தி’இன் சிறப்பு நிகழ்ச்சிக்குப் பதியுங்கள்!

வாசிப்புநேரம் -
"நாளை நமதே" - மாறும் வேலைச்சூழலில் உங்களுக்குத் தெரியவேண்டியவை - 'செய்தி’இன் சிறப்பு நிகழ்ச்சிக்குப் பதியுங்கள்!

படம்: இம்ரான்

வருங்காலத்தில் வேலைகள் எப்படியிருக்கும்?

இப்போது நாம் செய்யும் வேலைகள் காணாமல் போய்விடுமா?

அப்படி நடந்தால் நாம் என்ன செய்யலாம்?

இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கிறது, மீடியாகார்ப் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு, தொழிலாளர்களுக்காக நடத்தும் 'நாளை நமதே' என்ற நிகழ்ச்சி.

SkillsFuture SG, Lifelong Learning Institute, e2i ஆகியவற்றுடன் இணைந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிச்சயமற்ற வேலைச்சூழலில் தொழில் முன்னேற்றம், வாய்ப்புகள், நிலைத்தன்மை பற்றிய யோசனைகளை நிகழ்ச்சி முன்வைக்கும்.

உற்பத்தி, வர்த்தகம், போக்குவரத்து, தொடர்பு தகவல் போன்ற துறைகளில் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக மனிதவள அமைச்சின் அண்மை அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.

தானியக்கம் அறிமுகம் செய்யப்படுவதால் கட்டுமானம், தளவாடம், சேவை, உற்பத்தி, உணவு-பானம், எழுத்தர் போன்ற வேலைகளில் ஊழியர்களின் தேவை குறைகிறது.

சிங்கப்பூர் அரசாங்கம் blue-collar என்று அழைக்கப்படும் உடலுழைப்பு வேலைகளில் நிபுணத்துவத்தைச் சேர்ப்பதற்கும் ஊழியர்களை SkillsFuture பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதற்கும் முயற்சி எடுக்கிறது.

‘நாளை நமதே' நிகழ்ச்சி, reskilling அதாவது புதுத் திறன்களைக் கற்றுக்கொள்வதையும் upskilling அதாவது திறன்களை வளர்த்துக்கொள்வதையும் ஊக்குவிக்கும்.

விவரம்:

நாள்: 24 ஜூன் 2023
இடம்: சி யுவன் சமூக மன்றம் (Ci Yuan Community Club), 51 ஹவ்காங் அவென்யூ 9, சிங்கப்பூர் 538776
நேரம்: பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை

அனுமதி இலவசம்.

சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் பதிவுசெய்யலாம்.

நிகழ்ச்சியில் என்ன எதிர்பார்க்கலாம்?

  • ஆள்சேர்ப்பு, திறன் மேம்பாட்டு நிபுணர்கள் வழிநடத்தும் பயிலரங்குகள், உரையாடல்கள். வேலை வாய்ப்புகள் உள்ள துறைகள், தேவையான திறன்கள் பற்றிப் பேசப்படும். நல்ல சுயவிவரக் குறிப்பை (resume) எழுதுவதற்கும் தெரிந்துகொள்ளலாம்.
  • திறனை வெற்றிகரமாக வளர்த்துக்கொண்ட சிலரின் அனுபவங்கள்
  • உணவு
  • கேளிக்கைகள்
  • போட்டிகள்
  • பரிசுகள்
  • அன்பளிப்புப் பை
  • இலவசப் பற்றுச்சீட்டுகள்

இப்போதே பதிவு செய்யுங்கள்! ஒரு நிமிடத்துக்குள் பதிவு செய்துவிடலாம்.

நிபந்தனைகளை இங்கு காணலாம்.

கேள்வி இருந்தால் Priyanga.PS [at] mediacorp.com.sg எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்