Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குறைந்த வருமான வேலையா? 7,000 வெள்ளி வரை சம்பாதிக்கலாம் என்கிறார் திபன்

வாசிப்புநேரம் -
02:47 Min
குறைந்த வருமான வேலை என்றாலே குறிப்பிட்ட அளவுதான் சம்பாதிக்க முடியும் எனப் பலர் நினைப்பதுண்டு.

ஆனால் அந்த வேலையிலும் கைநிறைய சம்பாதிக்கலாம் என்பதை நிரூபித்துக் காட்டியவர்தான் திபன்.

"21 வயதில் Class 4 வாகனமோட்டும் உரிமம் பெற்றேன். Prime Mover கனரக ஓட்டுநர் வேலையில் சேர்ந்தேன். அப்போதைக்குச் சிங்கப்பூரில் நான் தான் மிக இளவயது கனரக ஓட்டுநர்"
"அப்போதே நான் 4,000 வெள்ளி வரை சம்பாதித்தேன்"

என்று கூறுகிறார் திபன்.

வாகனப் பழுதுபார்ப்பில் வேலையைத் தொடங்கிய திபன் இன்று இந்த அளவுக்கு முன்னேற என்ன காரணம்? அவர் எவ்வாறு திறன்களை வளர்த்துக்கொண்டார்?

மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு தொழிலாளர்களுக்காக நடத்தவுள்ள 'நாளை நமதே' நிகழ்ச்சியில் தமது அனுபவங்களைப் பகிரவிருக்கின்றார் திபன்.

இந்த இலவச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெற மறவாதீர்கள்.

நிகழ்ச்சிக்குப் பதிந்துகொள்ள சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இந்த இணையப்பக்கத்திற்குச் செல்லலாம்.

https://binkd.co/KSeRU


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்