சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
திறனை வளர்த்து வேலையில் முன்னேறலாம்- செய்தியின் 'நாளை நமதே' நிகழ்ச்சியில் பேசவிருக்கும் திபன்

படம்: திபன்
திறன்களை வளர்த்துக்கொண்டு கூடுதலான வேலைவாய்ப்புகளை எவ்வாறு பெறலாம்? எந்தெந்தத் தொழில்களில் அத்தகைய வாய்ப்புகள் உள்ளன?
இதுபோன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு நடத்தும் 'நாளை நமதே' நிகழ்ச்சி.
தொழிலாளர்களுக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பேச்சாளராகக் கலந்துகொள்ளவிருக்கும் தொழிலாளர் ஒருவரைச் சந்தித்தது 'செய்தி'.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் நைட்டெக் (Nitec) சான்றிதழ் பெற்றவர் திபன்.
பின்னர் வாகனப் பழுதுபார்ப்பாளராக வேலையைத் தொடங்கினார்.
தம்மிடம் இருந்த Class 4 வாகனமோட்டும் உரிமத்தை வைத்து இன்னும் சிறப்பான வேலைவாய்ப்புகளைப் பெறமுடியுமென அறிந்தார்.
Prime mover எனும் கனரக வாகன ஓட்டுநர் வேலை அவற்றுள் ஒன்று.
வேலையில் சேர்ந்தார். அதன் பலனையும் பெற்றார்.
எட்டாண்டுகளாக இந்த வேலையில் இருக்கிறார் திபன்.
முதலாளியின் ஊக்கத்துடன் திறன்களை வளர்த்துக்கொண்டார்.
இன்று நிறுவனத்தின் போக்குவரத்துப் பிரிவுத் தலைவராக உள்ளார்.
இவரின் மேற்பார்வையில் சில இளையர்களும் இருக்கிறார்கள்.
இந்தத் தொழிலில் போட்டித்தன்மைமிக்க வருமானத்தைப் பெறமுடியும் என்பதைப் பலர் அறியாமலேயே இருப்பதாகக் கூறுகிறார் திபன்.
வாழ்க்கையில் முன்னேறிய திபன் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார் 'நாளை நமதே' நிகழ்ச்சியில்.
திறன்களை வளர்த்துக்கொண்டு எவ்வாறு முன்னேறலாம் என்பதற்கான வழிகாட்டுதலையும் நிகழ்ச்சி வழங்கும்.
ஹவ்காங்கில் உள்ள சி யுவன் சமூக மன்றத்தில் ஜூன் 24ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
நிகழ்ச்சியைப்பற்றி மேல் விவரம் பெற 'செய்தி' இணையவாசலை நாடலாம்.
'நாளை நமதே' நிகழ்ச்சிக்குப் பதிந்துகொள்ள சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இந்த இணையப்பக்கத்திற்குச் செல்லலாம்.