Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

தமிழ்மொழியின் சிறப்பையும் ஆர்வத்தையும் எடுத்துச்சொல்லும் 6 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

வாசிப்புநேரம் -
இளம் தலைமுறையினருக்குத் தமிழ்மொழியின் சிறப்பையும் ஆர்வத்தையும் எடுத்துச்சொல்லும் பொறுப்பு ஆசிரியர்களுடையது.

அயராது உழைக்கும் ஆசிரியர்களைப் பாராட்டும் வகையில் நல்லாசிரியர் விருது நிகழ்ச்சி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இன்று நடைபெற்றது.

தமிழ் முரசு, தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஆகியவை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

இம்முறை மொத்தம் 566 ஆசிரியர்கள் விருதுகளுக்கு முன்மொழியப்பட்டனர்.

- திருவாட்டி ஹருன்னிஷா முகம்மது ஜமாலுதீன்
- திருவாட்டி பு.கயல்விழி
- திருவாட்டி உஷா கிருஷ்ணசாமி
- திருவாட்டி அ. அஸ்மது பீவி
- திருவாட்டி மகேஸ்வரி செல்வராஜூ
- திருவாட்டி ஷாமினி ராஜகுமார்

ஆகிய 6 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

தேசியக் கல்விக் கழகத்தின் சிறந்த தமிழ்ப் பயிற்சியாசிரியர் விருது திருவாட்டி பிரியதரிசினிக்கு வழங்கப்பட்டது.

பீட்டி உயர்நிலைப் பள்ளியின் திரு. ஆறு அஞ்சப்பனுக்கும் யீஷுன் இன்னோவா தொடக்கக்கல்லூரியின் திருவாட்டி மல்லிகாவுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்