முத்திரைபதித்த முன்னோடிகள்: சிங்கப்பூரில் கட்டப்பட்ட முதல் இந்துக் கோவிலுக்குக் காரணமானவர்
சிங்கப்பூரில் கட்டப்பட்ட முதல் இந்துக் கோவிலுக்குக் காரணமானவர் திரு. நாராயணப் பிள்ளை.

படங்கள்: நித்திஷ் செந்தூர்
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
சிங்கப்பூரில் கட்டப்பட்ட முதல் இந்துக் கோவிலுக்குக் காரணமானவர் திரு. நாராயணப் பிள்ளை.

சவுத் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் அவரது முயற்சியில் விளைந்த ஆலயம்.

1819இல் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸுடன் (Stamford Raffles) சிங்கப்பூரில் காலடி எடுத்து வைத்தார் திரு. நாராயணப் பிள்ளை.
இங்கே வீடுகள் கட்டப்பட்டு வந்த அதீத வேகத்தைக் கண்டு சிங்கப்பூரின் முதல் செங்கல் சூளையைத் தொடங்கினார் அவர்.
அதோடு கிராஸ் ஸ்ட்ரீட்டில் பருத்தித் துணி விற்பனையிலும் ஈடுபட்டார் திரு. நாராயணப் பிள்ளை.

பிரிட்டிஷ் வணிகர்கள் சிங்கப்பூருக்கு வர, அவர்களிடமிருந்து அதிக அளவில் கடனுக்குப் பருத்தித் துணிகளை வாங்கினார்.
கிராஸ் ஸ்டிரீட்டில் அமைந்த அந்தச் சந்தை விரிவடைந்து சிங்கப்பூரின் ஆகப் பெரிய, பிரபலமான சந்தையாக உருவெடுத்தது.
ஆனால் 1822இல் அந்தச் சந்தை தீப்பற்றி நிர்மூலமானது.
அதில் நொடித்துப்போனாலும் இந்துக்களுக்காகக் கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடவில்லை திரு. நாராயணப் பிள்ளை.
அதற்கெனக் கணிசமான தொகையை ஒதுக்கினார் அவர்.

அதன்படி அவர் உருவாக்கிய ஸ்ரீ மாரியம்மன் கோவில் இப்போது சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்று.
திரு. பிள்ளை தமிழர்களிடையே பெரும் மதிப்பைப் பெற்று அவர்களிடையே ஏற்பட்ட சச்சரவுகளைத் தீர்க்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றிருந்தார்.