Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பொருளாதார வளர்ச்சிக்குக் கைகொடுத்த மூத்த வர்த்தகத் தலைவர்களுக்குக் கெளரம்

வாசிப்புநேரம் -
பொருளாதார வளர்ச்சிக்குக் கைகொடுத்த மூத்த வர்த்தகத் தலைவர்களுக்குக் கெளரம்

படம்: Instagram/singapore_edb

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்குச் சிறந்த பங்களித்த இரண்டு மூத்த வர்த்தகத் தலைவர்கள் கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

ரசாயன, பகுதி மின்கடத்தித் துறைகளைச் சேர்ந்த இருவருக்கும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் பொதுச்சேவை நட்சத்திர விருது வழங்கினார்.

ஜெர்மன் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்தியன் கூல்மான் (Christian Kullmann), தைவானிய நிறுவனத் தலைவர் ஸ்டேன் ஹங் (Stan Hung) ஆகியோர் விருதுகளைப் பெற்றனர்.

திரு ஹங் 1991ஆம் ஆண்டு United Microelectronics Corporation நிறுவனத்தில் இணைந்தார்.

2018ஆம் ஆண்டு அவர் தலைவர் பொறுப்பை ஏற்றார்.

அண்மையில் அந்நிறுவனத்தின் 6.7 பில்லியன் வெள்ளி மதிப்பிலான பகுதிமின் கடத்தி வளாகத் திட்டத்தை அவர் வழிநடத்தினார்.

திரு கிறிஸ்தியன் கூல்மான் 2017ஆம் ஆண்டுமுதல் Evonik நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார்.

இங்கு ஆக அதிகமாக முதலீடு செய்துள்ள ரசாயன நிறுவனங்களில் ஒன்று Evonik.

கடந்த 50 ஆண்டில் அது சுமார் ஒன்றரை பில்லியன் வெள்ளியை முதலீடு செய்துள்ளது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்